சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நம்பிக்கை, துரோகம், சூது, சூழ்ச்சி யாரால் அரங்கேற்றப்பட்டது என்பது தெரியும். ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அடம்பிடித்ததே தோல்விகளுக்கு காரணம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருமொழிக் கொள்கையையே ஆதரித்தனர்" என்றார்.