டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் (பி பிரிவு) மோதுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.