தொடர்ந்து மீன் சாப்பிட்டால் பல நோய்களைத் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். வாரம் மூன்று முறை மீன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். கால்சியத்துடன், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி போன்றவையும் மீனில் உள்ளது. இவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. மீனில் அதிகம் உள்ள ஒமேகா-3 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சிறுநீரகத்திற்கும் இதயத்திற்கும் நல்லது.