வதந்திகளை நம்ப வேண்டாம்.. துரை வைகோ வேண்டுகோள்

78பார்த்தது
வதந்திகளை நம்ப வேண்டாம்.. துரை வைகோ வேண்டுகோள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துரை வைகோ தெரிவித்துள்ளார். 'எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டுமே உள்ளது. வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார். விரைவில் வைகோ பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார். அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி