மைதா மாவைப் பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப்படுவதால் அதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இருக்காது. இதனால், நமது உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது. பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மைகொண்டது. இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும்.