சிலருக்கு எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுதும் அதிக அளவு வியர்க்கும். இதற்கு 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' என்று பெயர். இதய வால்வு வீக்கம், எலும்பு தொடர்பான தொற்றுகள், எச்ஐவி தொற்றுகள் இருந்தாலும் அதிக வியர்வை வெளியேறும். அதிக வியர்வை இதய நோயின் பொதுவான அறிகுறி ஆகும். மன அழுத்தமும் வியர்வையை ஏற்படுத்தலாம். எனவே சாதாரண நாட்களில் மற்றவர்களை காட்டிலும் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.