சுதேசமித்திரன் 1882 முதல் 1985 வரை அப்போதைய மதராஸ் நகரத்திலிருந்து வெளிவந்த தமிழ் மொழி செய்தித்தாள் ஆகும். இது தான் முதல் தமிழ் மொழி நாளிதழ். இதழின் முதல் ஆசிரியராக பணியாற்றிய ஜி சுப்பிரமணிய ஐயரால் சுதேசமித்திரன் நிறுவப்பட்டது. இது முதலில் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் 1889-ஆம் ஆண்டில் நாளிதழாக மாறியது. தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை தூண்ட சுப்பிரமணிய ஐயரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.