பூமியின் அழிவு குறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கணிப்புப்படி பூமியில் உள்ள கண்டங்கள் அனைத்தும் மிக மெதுவாக நகர்வதாகவும், இவை அனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து ‘Pangea Ultima’ என்ற சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்றும், அப்போது பூமி மிக வெப்பமானதாக மாறி மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் அழியக் கூடும் என்றும், இதற்கு சில மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளனர்.