பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்த உண்மையை உடைத்த தனக்கு நாதகவினர் மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.