வேடசந்தூர்: கார் சாலையோர மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

82பார்த்தது
மதுரை நியூ விளாங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் பரத் வயது 30 இவரது மனைவி ஸ்ரேயா வயது 27 இருவரும் ஒரு காரில் மதுரையில் இருந்து பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பரத் ஓட்டி சென்றார். கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த ரங்கநாதபுரம் கால்நடை மருத்துவமனை அருகே சென்ற பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தின் மீது மோதி காரின் முன் பக்கம் நொறுங்கியது. இதில் மின் கம்பம் உடைந்து கீழே விழுந்தது. காரில் பயணம் செய்த இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி