1, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

69பார்த்தது
1, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 1, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் ராதா தலைமை காவலர் தினேஷ் பிரபு மற்றும் காவலர்கள் திண்டுக்கல், வடமதுரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பிலாத்து பகுதியில் வெற்றிமுருகன்(36) என்பவர் தனது வீட்டில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் வெற்றிமுருகனை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 1, 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி