பணத்தை திரும்ப வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

1056பார்த்தது
தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

தனியார் நிதி நிறுவனத்திடம்
முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்கக்கோரி திண்டுக்கல் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்த பணம் இதுவரை திரும்ப வழங்கவில்லை எனக்கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொது மக்கள் எங்களுடைய பணத்தை மீட்டு தராவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை
புறக்கணிப்போம் எனக் கூறி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி