நான் டெபாசிட் வாங்கக்கூடாது என திட்டமிட்டு நிறுத்தி விட்டார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை செய்யாறு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோடு கிழக்கில் எங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் வாக்குகள் வந்திருக்க வேண்டும். முடிவு செய்து 25 ஆயிரத்தோடு நிறுத்தி வைத்துவிட்டார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது இதோடு போதும் என்று நிறுத்தி விட்டார்கள்' என குற்றம்சாட்டியுள்ளார்.