போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் குணசுந்தரி தலைமையிலான மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதில் பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி பேன்சி எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் கால், மெசஞ்சர் கால் ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும். தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செல்போனில் குற்றவாளத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறு யாரும் உடன் இருக்கக் கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும் தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி