மாவட்டத்தில் 77. 60மி. மீ மழைப்பொழிவு பதிவு

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் நிலவியது. இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனுா், பூம்பாறை, ஆகியப் பகுதிகளில் 40நிமிஷம் நல்ல மழை பெய்தது. சிறிது நேரம் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

மேலும் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், வெள்ளி நீா்வீழ்ச்சி ஆகியப் பகுதிகளில் 30 நிமிஷம் மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளில் ஆங்காங்கே எரிந்து வந்த காட்டுத் தீ தற்போது கட்டுக்குள் வந்தது.

கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக சற்று குளுமையான சீதோஷன நிலைநிலவுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் இருந்தது தற்போது பெய்த மழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். அந்த வகையில் 09. 05. 2024 காலை 8 மணி முதல் 10. 05. 2024 காலை 8 மணி வரை மழைப்பொழிவின் விபரம் ;

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 30மி. மீ மழையும், பழனியில் 1மி. மீ மழையும், சத்திரப்பட்டியில் 12. 4 மி. மீ மழையும், நிலக்கோட்டையில் 4மி. மீ மழையும், காமாட்சிபுரத்தில் 3. 7மி. மீ மழையும், கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 26. 5மி. மீ மழையும் பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 30மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி