ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள்

69பார்த்தது
ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அக்டோபர் மாதத்தில் ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றது.

இதன் சிறப்பு அம்சம் 2 மாதங்களில் பசுமை நிறத்தில் காணப்படும். இந்த மரத்திலுள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து செர்ரிப் பூக்கள் மட்டுமே ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.

மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் குளுமையான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் இந்த பூக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கழுகு பார்வை காட்சிகளால் பார்க்கும் போது ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி