தூய்மை பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

1905பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அலுவலகம் அரை முன்பு குப்பைகளை கொட்டி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் உரிய வசதிகள் இன்றி குப்பைகளை பிரித்துக் கொடுக்க வலியுறுத்துவதாகவும், கூடுதல் வேலை கொடுத்து தொல்லை கொடுத்து வரும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை அடுத்து ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புகார் எழுந்த சுகாதார ஆய்வாளர்கள் பணி மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் காமராஜ் வெள்ளிக்கிழமை மதியம் 1: 30 மணி அளவில் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ‌ அந்தப் புகாரியில் ஆணையர் அறை முன்பு குப்பைகளை கொட்டி பணி செய்ய விடாமல் தடுத்த தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி