பாமக வேட்பாளர் திலகபாமா பிரச்சாரம்

561பார்த்தது
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா பழனி நகர் பகுதியில் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் பழனி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாமக வேட்பாளர் திலகபாமா விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

குறிப்பாக தேர்தலுக்கு பிறகு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் உழவர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு தேவையான‌ விதைகள், உரங்கள் ஆகியவற்றை முறையாக வழங்கவும், தெரிவித்தார். மேலும் ஊடுபயிர் பயிரிடுவது, எந்த எந்த நேரத்தில் என்னென்ன பயிரிடுவது, விளைந்த பயிர்களை விவசாயிகளை நேரடியாக உரிய விலைக்கு விற்பனை செய்வது, இந்த தொழில்நுட்ப மையத்தின் மூலம் விவசாயிகள் தெரிந்துகொண்டு பயனடையலாம் என்றும் தெரிவித்தார்.

ஆந்திராவில் உள்ள ஒருபகுதியில் இந்த திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதைபோலவே திண்டுக்கல் தொகுதியில் செயல்படுத்தப்படும் என்றும், தேர்தலுக்கு பிறகு பாரதபிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் மோடியின் கவனத்திற்கு இந்த திட்டத்தை கொண்டுசென்று அதை நாடுமுழுவதும் மத்திய அரசின் நிதியிலேயே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி