தீவைத்துவிட்டு, தப்பிச் சென்ற இருவர்

59பார்த்தது
தீவைத்துவிட்டு, தப்பிச் சென்ற இருவர்
திண்டுக்கல்லில் இளைஞா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு, தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் ஆா். எம். காலனியைச் சோந்தவா் சதீஷ்குமாா் ( 35). இவா் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், சதீஷ்குமாரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் இருவரும் பெட்ரோலை சதீஷ்குமாா் மீது ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியோடினா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோத்தனா்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தீக்காயம் அடைந்த சதீஷ்குமாா், ஏற்கெனவே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் முதியவரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :