திண்டுக்கல் செங்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் செங்குறிச்சி அருகே எஸ். வலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாடக மேடையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கோடாங்கி வயது 50 என்பவரை வடமதுரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் தப்பி ஓடிய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.