பாரத் கௌரவம் சுற்றுலா ரயில் அறிமுகம்

70பார்த்தது
திண்டுக்கல் பிரஸ் கிளப்பில் இந்தியன் ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டிசி ஆனது சுற்றுலா பயனளிக்காக உத்தியோக பாரத் கௌரவம் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை 19 பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கியுள்ளது.

தற்போது 8 இரவுகள் 9 பகல்கள் என புண்ணிய தீர்த்தா யாத்திரை என்னும் ரயில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் மதுரை திருச்சி தஞ்சை கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் சென்னை வழியாக காசி திருவேணி சங்கமம் கயா மற்றும் அயோக்கிய ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இல் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ18, 500 கட்டணத்திற்கு சிலிப்பர் வகுப்பில் ரயில் பயணம் நான் ஏசி தங்குமிடம் உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து செலவு, தென்னிந்திய சைவ உணவு சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி பயணக் காப்பகுதி பயணத்தின் போது மருத்துவ வசதி என அனைத்தும் ஒரே கட்டணத்தில் என தனியாருக்கு நிகராக மிகக் குறைந்த விலையில் ஐ ஆர் சி டி சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி இந்தப் பயணம் தொடங்குகிறது. www. irctctourism. com என்ற இணையதள முகவரியிலும் 8287932122 / 8287532070 என்ற தொலைபேசி எண்ணையும் பயணத்தின் விவரங்கள் மற்றும் புக்கிங் ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ளலாம் என பத்திரிகையாளர் சந்திப்பில் தென் மண்டல குழு மேலாளர் ராஜலிங்கம் வாசு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி