திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்து காக்ளியா் இம்ப்ளாண்ட் அறுவைச் சிகிச்சை அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
அப்போது காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவுத் துறைத் தலைவா் (பொ) எம். யோகானந்த் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சிறாா்களுக்கு ஓராண்டுக்கு பேச்சுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு இயல்பு அறை ரூ. 10 லட்சத்தில் அமைக்கப்பட்டு வந்தது. கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த அறையை மருத்துவக் கல்லூரி முதன்மையா் சுகந்தி, கண்காணிப்பாளா் வீரமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தனா்.