திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் பெற்றோர் தின விழா

53பார்த்தது
திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் பெற்றோர் தின விழா
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் ரோஸ்லின் அனைவரையும் வரவேற்றார். சகோதர் ஜான்லுக்காஸ், துணை முதல்வர் ஞானசீலா, ஒருங்கிணைப்பாளர் ஜூலியட் ரோஸ், ஆசிரியைகள் மெர்சி , சங்கீதா, இசபெல்லா , கபிலா, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், பிரசாந்த், ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு பேசியதாவது: மாணவர்களுக்கு பெற்றோர்தான் முதல் ஆசிரியர்கள். நல்லது எது, கெட்டது எது என அவர்கள் கூறுவார்கள். இந்த பள்ளி பெற்றோர் தின விழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று உயர்ந்த பதவிக்கு போக வேண்டும் என கனவு காணுகிறார்கள். அந்தக் கனவுகளை இந்த செவாலியர் பள்ளி நிறைவேற்றி வருகிறது. நாளை எதிர்காலம் குழந்தைகள் தான் என்பது உங்களுக்கு தெரியும். அந்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்க்க அனைத்து பெற்றோருக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும் அதை குழந்தைகளிடம் காட்டக் கூடாது. நீங்கள் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான். இவ்வாறு அவர் பேசினார். பெற்றோர்களுக்கு லக்கி கார்னர், பலூன் உடைத்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி