திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக 2 பேர் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் படுகாயம்.
திண்டுக்கல் ஆத்தூர் அருகே சித்தலக்குண்டு அலவாச்சிப்பட்டியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் நவீன்குமார்(27). இவர் அலாஸ்கா கார்டன், ரியல் எஸ்டேட் அருகில் நின்று கொண்டிருந்த போது முன் விரோதம் காரணமாக இரண்டு பேர் சேர்ந்து தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து ஆத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.