ஆத்தூர்: முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர்

64பார்த்தது
சென்னை கோட்டூர்புரம் நூலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சி புது பேருந்து நிலையம் எதிரே முதல்வர் மருந்தகத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 31 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நலத்திட்ட உதவி ஐந்து பதினாளிகளுக்கும் 34 மாற்று திறனாளிகளுக்கு சுமார் ரூபாய் 34. 61 லட்சம் மதிப்பீட்டிலான இருசக்கர வாகனம் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதிஜோதி பிரகாஷ் பேரூராட்சி மன்ற தலைவர், கூட்டுறவு வங்கிகளின் இணைப்பதிவாளர், கூட்டுறவு துறை அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி