திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் கோட்டாட்சியா் கு. பிரேம்குமாா் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது திங்கள்கிழமை காலை 11 முதல் 12 மணி வரை வேளாண் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் விவசாய சங்கங்கள், விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.