தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. ஒகேனக்கல் காவேரி ஆறு இங்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்வது வழக்கம். இந்த வகையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வருடத்தின் கடைசி நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.
மேலும் ஐந்து அருவி சினி ஃபால்ஸ் சிற்றருவி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் மேலும் உற்றார் உறவினர்களுடன் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டும் மீன் உணவை சமைத்தும் மகிழ்ந்தனர்.