தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள அ. பாப்பாரப்பட்டியை சேர்த்தவர் சின்னதம்பி. மாற்றுத்திறனாளி. இவர் வீட்டு முன்பு கறவை மாடு கட்டி வைத்திருந்தார். இந்த மாட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பாப்பாரப்பட்டி வேடிக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.