விடுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்த ஒகேனக்கல் நீர்

70பார்த்தது
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 1. 55 இலட்சம் கன அடியிலிருந்து 1. 58 இலட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் பகுதியில் பாறைகள், அருவிகள் தெரியாத அளவில் வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. மேலும் வெள்ளம் ஆற்றை கடந்து, ஒகேனக்கல் பகுதியில் வீட்டையும், ஆலம்பாடி பகுதியில் தங்கும் விடுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரமுள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி