தர்மபுரி: தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் அறிவிப்பு

58பார்த்தது
தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள், பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின்கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு செல்வமகள் மற்றும் பொன்மகன் திட்டத்தில் கணக்கு தொடங்கிக் கொடுத்து சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தபால் நிலையங்களுக்கு நேரில் வர இயலாதவர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயன்பெறலாம். தபால் துறையின் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே மேற்கண்ட கணக்குகளைத் தொடங்கலாம். தவணைத் தொகையைச் செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி