தர்மபுரி: திமுக மா. செயலாளர் பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோ வைரல்

80பார்த்தது
தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் தலைமையில் நேற்று அவசர செயற்குழு கூட்டம், தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசும்போது, இனிமேல் நான் சொல்வது தான், எந்த ஒரு அதிகாரியும் நான் சொல்றது கேட்கவில்லை என்றால், யாரும் இருக்க மாட்டாங்க. மாவட்ட ஆட்சியராகட்டும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கட்டும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் வேற மாவட்டத்திற்கு மாத்தி விடுவேன். மீறி கேம் ஆடனும்னு நினைத்தால் அவர்களை காலி செய்து விடுவேன். பீடிஓ ஆபிஸில் கூட ஏ டூ இசட் வரை எதுவும் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாது. அதேபோலத்தான் ஒன்றிய செயலாளர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்கூடாது. இதில் குறுக்கு சால் யாரும் ஓட்ட முடியாது. மேலும் தருமபுரி பொறுப்பு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இதுக்கு முன்பு எப்படி இருந்தார் என்று எனக்கு தெரியாது. இனிமேல் நான் சொல்வது தான் என பேசும் ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி