முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

67பார்த்தது
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார். வாழ்க பல்லாண்டு” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி