கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு முரண்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயலலிதாவை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பாஜக தலைவர்கள் தற்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உருவாக, ரஜினிகாந்த் முயற்சிகளை முன்னெடுக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.