பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு பைக்கில் சென்றார். அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த போது, பைக்திருடு போனது. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மொபட்டை பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த மாதேஷ் (வயது 26) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்