தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு முதல் உதவி சிகிச்சை முகாம் இன்று செப்டம்பர் 25 நடந்தது. அரசு கலைக் கல்லூரி தர்மபுரி நாட்டு நலப்பணி திட்டம் , இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை தர்மபுரி இணைந்து முதல் உதவி சிகிச்சை பரிசோதனை, முதலுதவி பற்றிய விழிப்புணர்வுடன் செய்முறை பயிற்சியும், மக்கள் மயக்கம் போட்டு மயங்கி கீழே விழும்போது அவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதைப் பற்றியும் எடுத்து கூறினார்கள் இச்செயல்கள் கல்லூரி கலையரங்கத்தில் முதல்வர் முனைவர். கண்ணன் தலைமையில் நடைப்பெற்றது. இதனை இந்திய மருத்துவ சங்கம் தருமபுரி செயலாளர் டாக்டர். சண்முகப்பிரியா , டாக்டர். வேலவன் மயக்க மருந்து நிபுணர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு செயல்களை செய்து காட்டி விளக்கினார்கள்.
இம்மருத்துவ முகாமை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. சந்திரசேகரன், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள் இதில் விலங்கியல் துறை தலைவர் கே. விஜயதேவன். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பெ. தேசிங்கு, விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா. ராதிகா கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் திருமதி ஷர்மிளி மற்றும் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டனர்.