தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் அக்டோபர் 30 நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
ஆடுகள் 5000 முதல் 9700 வரையிலும் மாடுகள் தரம் மற்றும் ரகத்திற்கு தகுந்தவாறு 8000 முதல் 42000 ரூபாய் வரையிலும் நாட்டுக்கோழிகள் 400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலும் என நேற்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 2 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.