தர்மபுரி: வாரச்சந்தையில் 4 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

61பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று நவம்பர் 3 நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 8, 000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 16, 000 ரூபாயில் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் வரை விலை அதிகரித்து காணப்பட்டது மேலும் 25க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் நேற்று விற்பனையான நிலையில் 4 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி