தர்மபுரி: வாணியாறு அணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டம்

62பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு பகுதியில் சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காட்டின் பின் பகுதியில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இயற்கை எழில் கொஞ்சும் அலை அலையான பசுமை போர்த்திய மலைகள், பலதரப்பட்ட மூலிகை தாவரங்கள், விலங் குகள், மயில், பறவைகள் நிறைந்த வனப்பகுதி அருகே வாணியாறு அணை உள்ளது. பரபரப்புடன் இருப்பவர்கள் அமைதியாக ஓய்வெடுக்க உகந்த இடமாகும். இந்த அணை 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 4 கி. மீ. பரப்பளவில், 65. 27 அடி கொள்ளளவு தண் ணீரை தேக்கி வைக்கப்படு கிறது. இந்த அணை வெங்க டசமுத்திரம், ஆலாபுரம் உள் ளிட்ட பல்வேறு ஏரிகளுடன் கால்வாய் மூலம் இணைக்கப் பட்டுள்ளது. அணைக்கு அருகில் 100-க்கும் மேற்பட்ட ஏக் கர் பரப்பளவில் சிறிய பூங்கா மற்றும் அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ளன.

தற்போது வாணியாறு அணை சுற்றுலா பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்களுடன் அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுலா பய ணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக கண்ட றியப்பட்டுள்ள வாணியாறு அணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதற்கான முதல் கட்ட ஆய்வுப்பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாணியாறு அணையில் பல்வேறு வகை யான சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற் கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் இன்று வெளியிட்ட அறிக்கையில் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி