தர்மபுரி: அரசு இடத்தில் கொட்டகை அமைத்த இருவர் மீது வழக்கு

60பார்த்தது
தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில், ரயில்வே சுற்றுச்சுவர் ஓரத்தில், நெடுஞ் சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில், நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன், மணி ஆகிய இருவரும் திடீரென கொட்டகை அமைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் மற்றும் உதவி பொறியாளர் நரசிம்மன் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் கொட்டகையை அகற்றும்படி கூறினர்.

அவர்கள் ஏற்கனவே இருக்கும் கொட்டகைகளை அப்புறப்படுத்திய பிறகு, நாங்கள் எடுத்து விடுகிறோம் என கூறினர். நோட்டீஸ் கொடுத்து அவர்களையும் காலி செய்ய கூறினர். இதனை ஏற்காத இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொம்மிடி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர்கள் சென்று சமாதானப்படுத்தினர். அதனை ஏற்காததால், நெடுஞ்சாலை கோட்ட உதவி செயற்பொறியாளர் நரசிம்மன் அளித்த புகாரின் பேரில், இன்று நெடுஞ்செழியன், மணி ஆகிய இருவர் மீதும், பொம்மிடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி