தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு நேற்று காலை தனியார் பேருந்து புறப்பட்டது. கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றர். சில்லாரஹள்ளி கோவிந்தன் கண்டக்டராக இருந்தார். ஒடசல்பட்டி -அரூர் பாரப்பட்டி பிரிவு ரோட்டில் சென்றபோது கடத்தூரில் இருந்து டூவீலரில் வந்த ஒருவர் திடீரென அரூர் ரோட்டில் திரும்பினார். இதனால் கடத்தூர் அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கும் தனியார் பேருந்து டூவீலர் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறமாக ஓட்டுநர் திருப்பினார். இதில், சாலையோர மின் கம்பத்தின் மீது மோதிய பஸ் அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தது. மோதிய வேகத்தில் மின் கம்பம் உடைந்து பஸ் சின் மீது விழுந்தது.
அதனைக் கண்டு பயணிகள் அலறினர் அப்போது, மின் சாரம் துண்டிக்கப்பட்ட தால் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில் கடத்தூர் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.