தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காவல் ஆய்வாளர் இல்லாமல் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் 40 காவலர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளர் உட்பட 13 காவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் நிரந்தர காவல் ஆய்வாளர் இல்லாததால் சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு வரும் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு விசாரணை நடைபெற காலம் தாழ்த்தப்படுகிறது. இதனால் தனி காவல் ஆய்வாளர் எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது எனவே பொம்மிடி காவல் நிலையத்திற்கு தனி காவல் ஆய்வாளர் மற்றும் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.