தர்மபுரி: உழவர் சந்தை சாலை பணியை துவக்கி வைத்த எம்பி

73பார்த்தது
நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ. ஜெட்டிஅள்ளி உழவர் சந்தை சாலையை சீரமைக்கும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. தர்மபுரி எம்பி ஆ. மணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் கவரம்மாள் அரிச் சந்திரன், வளர்ச்சி குழு தலைவர் பொன்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், துணை தலைவர் காசிலிங்கம், சுற்றுச்சூழல் அணி இளைய சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா மாரியப்பன், வார்டு உறுப்பினர் குமரன், கிளைச் செயலாளர்கள் வினோத், கருணாகரன் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி