அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் மாதத்தில் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, சாமியாபுரம் கூட்டுரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது மொத்தம் 408 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் உரிமம் இன்றி இயக்கிய ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 84 வாகனங்களுக்கு வரியாக ரூ.3,62,975, மற்றும் அபராதமாக ரூ.3,94,025 என மொத்தம் ரூ.7,57,000 விதிக்கப்பட்டது. மேலும், முறையான ஆவணங்கள் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.