தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூற்றோடு அருகாமையில் அமைந்துள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமான வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தியில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நாட்டு மாடுகள், எருமை மாடுகள், கலப்பின ஜெஸ்ஸி பசுக்கள், என பல தரப்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாடுகள் 8,500 முதல் 37,700 ரூபாய் வரையிலும், ஆடுகள் 6,200 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் ரூ. 40 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.