அண்ணாவின் கையில் மர்மபை

50பார்த்தது
அண்ணாவின் கையில் மர்மபை
தர்மபுரி நான்குரோடுரவுண்டானா அருகே, அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையில், அண்ணாவின் கையில் புளுகலர் துணி பை ஒன்று தொங்கியபடி இருந்தது. தகவலை அடுத்து தர்மபுரி டவுன் போலீசார் சிலை யின் அருகே சென்று அண் ணாவின் கையில் தொங்கிய மர்ம பையை அகற்றினர். பின்னர் அந்த பையை பார்த்தபோது, உள்ளே ஒயரும், பழுதான டிரான்ஸ் மிட்டரும் இருப்பது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்த னர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பையை தொங்கவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீ - சார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும். தர்மபுரி நான்கு ரோட் டில் அண்ணா சிலையின் கையில் பையை தொங்க விட்டது பரபரப்பை ஏற்ப - டுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி