தர்மபுரி: மலைப்பாதையில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

85பார்த்தது
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே, நேற்று பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்ற மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது ஏறி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலி மற்றவர்களை பலத்த ரத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சு மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. அதனை அடுத்து தொப்பூர் கணவாய் இரண்டாவது வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஏறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தை அறிந்த தொப்பூர் காவலர்கள் மற்றும் சுங்க சாவடி பணியாளர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி