தர்மபுரி: தட்சணகாசி காலபைரவர் ஆலயத்தில் ஜெயந்தி விழா

84பார்த்தது
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் ஜெயந்தி விழா நேற்று (நவ.,23) சிறப்பாக நடைபெற்றது.

காலபைரவர் ஜெயந்தியையொட்டி அதிகாலையில் சிறப்பு யாகம், அதனை தொடர்ந்து காலபைரவருக்கு அபிஷேகம், நடைபெற்று பின்னர் ராஜ அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் தமிழகம் இல்லாத கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பூசணி தீபமேற்றி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதைத்தொடர்ந்து மேட்டர் இரவு 10. 30மணிக்கு 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இன்று விடியற்காலை 2. 30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும் கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி