ஒட்டப்பட்டியில் மூன்று வீடுக களில் திருட்டு காவல் துறை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி என். ஜி. ஜி. ஓ. காலனியை சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், டாக்டர் உள்ளிட்ட 3 நபர்களின் வீடுகள் அருகருகே அமைந்து உள்ளது. நேற்று மர்மநபர்கள் டாக்டர் வீடு உள்ளிட்ட 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அதில் டாக்டர் வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மற்ற 2 வீடுகளிலும், நகை, பணம் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி