தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம் - டிடிவி தினகரன்

63பார்த்தது
தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம் - டிடிவி தினகரன்
சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' எனும் அருள்மொழியை வழங்கி சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த தினம் இன்று. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி