நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.40 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் ராயன் படம் ரூ.7.5 கோடியும், இதர இந்தியாவில் ரூ.10 கோடியும் வசூலித்திருக்கிறது. வெளிநாடுகளில் மட்டும் ராயன் படம் ரூ.20 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் கெரியரில் அதிவேகமாக ரூ.75 கோடி வசூலை கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.